தீவிரமடையும் காட்டுத் தீ – மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு

Facebook Cover V02

british-21பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ தீவிரமடைந்ததை அடுத்து, பாதுகாப்பு கருதி அங்குள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓகநாகன் (Okanagan) பிராந்தியத்தில் காட்டுத்தீ காரணமாக பல்வேறு குடியிருப்புகளைச் சேர்ந்த மக்கள், கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். இந்நிலையில், அப்பகுதியில் 198 காணிகளில் வசிக்கும் சுமார் 500 பேரை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் பீச் லான்ட்க்கும் சமர் லான்ட்க்கும் இடைப்பட்ட பகுதியில் மட்டும் சுமார் 500 ஹெக்டேயர் நிலப்பரப்பை காட்டுத்தீ சூழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் திகதி பரவத் தொடங்கி ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரையிலும் 2,000 ஏக்கர் வரையிலான காட்டுப் பகுதியை எரித்து சாம்பலாக்கிய காட்டுத்தீ, பிரிட்டிஷ் கொலம்பியாவில் குறித்த பருவகாலத்தில் இதுவரை ஏற்பட்ட காட்டுத்தீச் சம்பவங்களில் மிகப் பெரிய காட்டுத்தீச் சம்பவம் என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த தீ பரவல் காரணமாக சுமார் 50,000 பேர் வரையில் இடம்பெயர்ந்ததுடன், இதன்போது 211 வீடுகள் மற்றும் கட்டடங்கள் தீக்கிரையாகியது.

Share This Post

Post Comment