அங்கீகரிக்கப்படாத குடிவரவு முகவர்களின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் கனேடியக் குடிவரவுத் திணைக்களத்தால் நிராகரிப்பு

ekuruvi-aiya8-X3

can_passportசீனாவில் இருந்து இயங்கிவரும் அங்கீகரிக்கப்படாத குடிவரவு முகவர் நிறுவனம் ஒன்றின்  மூலம் சமர்ப்பிக்கப்பட்ட பெருந்தொகையான குடிவரவு விண்ணப்பங்கள் கனேடியக் குடிவரவுத் திணைக்களத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்களில் 57 பேரைக் கொண்ட குழு ஒன்று, குடிவரவுத்திணைக்களத்தின்தீர்மானத்தினை எதிர்த்துக் கனேடிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது. Flyabroad என்று அழைக்கப்படும் இந்நிறுவனத்தின் மூலம் தாங்கள் மொழிபெயர்ப்புச் சேவைகளையே பெற்றுள்ளதாகவும், இந்நிறுவனம் தமதுகுடிவரவு முகவராகச் செயற்படவில்லை என்றும் அவர்கள் தமது முறைப்பாட்டில்  தெரிவித்துள்ளனர்.

Flyabroad   என்ற நிறுவனம் உள்ளடங்கலாக, அங்கீகரிக்கப்படாத பல குடிவரவு முகவர் நிறுவனங்கள்  மூலம்சமர்ப்பிக்கப்பட்ட  பெருந்தொகையான குடிவரவு விண்ணப்பங்கள், பீஜிங் மற்றும் ஹொங்கொங் ஆகிய இடங்களில்அமைந்துள்ள கனேடிய விசா அலுவலகங்களினால் அடையாளம் காணப்பட்டு ,நிராகரிக்கப்படுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கனேடியக் குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி, குடிவரவுத்திணைக்களத்தின் அங்கீகாரம் பெற்று,கனேடியக்  குடிவரவு முகவர் பேரவையில் பதிவு செய்யப்பட்ட குடிவரவு முகவர்களே குடிவரவுச் சேவைகளைகட்டணம் பெற்று வழங்க அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

Share This Post

Post Comment