கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் பேரணிகள்

Thermo-Care-Heating

peraniகனடாவின் பல்வேறு பகுதிகளிலும் பெண்களுக்கான உரிமை மற்றும் சமத்துவத்தினை வலியுறுத்தும் பேரணிகள் நேற்று நடைபெற்றன.

தேசிய அளவில் இடம்பெறவுள்ள இந்த பேரணிகளின் பிரதான பேரணி மொன்றியலில் இடம் பெற்றுள்ளது.

மொன்றியல் நகரில் உள்ள எஸ்பிளனேட் கலைக்கூடத்தின் அருகே நேற்று முற்பகல் 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் ஒரு மணிவரை இந்த பேரணி நடைபெற்றுள்ளது.

இது தவிர ஒன்ராறியோ, பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பேர்ட்டா, கிழக்கு கரை பிராந்தியங்கள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலும் இவ்வாறான பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன.

ideal-image

Share This Post

Post Comment