எங்களது மகன் உங்களிடம் இருந்தால் கொடுத்துவிடுங்கள் – பெற்றோர் உருக்கம்

ekuruvi-aiya8-X3

can_parentகனடாவின் மொன்ட்ரியலை சேர்ந்த 10 வயது சிறுவன் காணாமல் போனதையடுத்து அவனது பெற்றோர் உருக்கமான கோரிக்கையை விடுத்துள்ளனர்,

Ariel Jeffrey Kouakou (10) என்ற சிறுவன் கடந்த 17 ஆம் திகதி தனது நண்பனின் வீட்டிற்கு சென்றுவிட்டு வருவதாக தனது பெற்றோரிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளான்,

ஆனால், 2 நாட்கள் ஆகியும் Ariel வீடு திரும்பவில்லை, இதனால் தனத மகனை யாரோ கடத்திவிட்டார்கள் என தந்தை Kouadio Frédéric Kouakou பொலிசில் புகார் அளித்துள்ளார்.

தனது மகனை கண்டுபிடித்துகொடுத்தால், $10,000 தொகை சன்மானம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

எனது மகன் உயிரோடு இருக்கிறான் என்று நான் நம்புகிறேன், அவன் கடத்தப்பட்டுள்ளான், உங்கள் யாரிடமாவது எனது மகன் இருந்தால் அவனை எங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடுங்கள் என கூறியுள்ளார்,

தாய் கூறியதாவது, எனது மகன் காணாமல் போன நாள் முதல் நான் நிம்மதியாக தூங்கவில்லை, எனது மகனால் எங்களை விட்டு நீண்ட தூரம் செல்ல இயலாது என கூறியுள்ளார்.

சிறுவனின் உடல் அடையாளங்களை தெளிவுப்படுத்தியுள்ள பொலிசார், சிறுவனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, விரைவில் கண்டுபிடிப்போம் என தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment