கனேடிய படையினரை சிரியாவுக்கு அனுப்ப மாட்டோம் – பாதுகாப்பு அமைச்சர்

ekuruvi-aiya8-X3

Harjit_sajjan_27கனேடிய படையினர் சிரியாவுக்கு அனுப்பப்பட மாட்டார்கள் என்று பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து கனடாவின் இராணுவ திட்டமிடுபவர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர்.

அத்துடன் ஈராக்கில் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனேடிய படைகளின் நடவடிக்கையை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பதான முடிவினை கனேடிய மத்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிலையில் கனேடிய பாதுகாப்பு அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான நடவடிக்கையில் கனடாவின் தற்போதைய கவனம் ஈராக்கிலேயே உள்ளதாகவும், கனடாவின் அந்த நிலைப்பாடே தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

தற்போதைக்கு தமது தரப்பு ஈராக்கில் தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கான இராணுவ வளங்களை மேலும் அதிகப்படுத்தி, அங்கு தேவையான மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

Share This Post

Post Comment