பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கம்

ekuruvi-aiya8-X3

TGTEநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் – அறிவித்தல்

எங்கள் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ உறவுகளே,

அனைவருக்கும் எமது அன்பு வணக்கங்கள்!

தமிழீழ மக்கள் தமது அரசியல் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றிச் சிந்தித்து, செயற்றிட்டங்களை உருவாக்கி முன்னேறிச் செல்ல வேண்டிய காலம் இதுவென்றும் அதற்கான பொறுப்பு புலம்பெயர் தமிழர் குழாத்தின் கையில் உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் எதிர்காலம் எமது கைகளிலேயே, தமிழீழ மக்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. எமது தலைவிதியை நாங்களேதான் தீர்மானித்தல் வேண்டும். உலக அரசுகளோ தத்தம் நாட்டு நலனையும், அதிலும் குறிப்பாகப் பொருளாதார, அரசியல் நலங்களை மட்டும் முன்னிலைப்படுத்தியே இயங்குகின்றன என்ற யதார்த்தைப் புரிந்து கொண்டு, நாம் எமது இலட்சியத்தை நோக்கித் துணிவுடன் பயணிக்க வேண்டியது இன்றைய காலத்தின் அவசியமாகும்.

மேற்குலக அரசுகளும் சரி அண்டை நாடான இந்தியாவும் சரி தமிழ் மக்கள் மீது அரைவேக்காட்டுத் தீர்வைத் திணித்து விட்டு, இலங்கைத் தீவினைத் தம் செல்வாக்குக்குள் வைத்திருக்கும் முயற்சியில்தான் நாட்டம் கொண்டுள்ளன என்பதும் வெளிப்படை.

இவற்றையெல்லாம் தெளிவாகத் தெரிந்து கொண்டு தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ் மக்களாகிய நாங்களே தீர்மானிக்கும் முன்னெடுப்பாக பொதுவாக்கெடுப்பை நோக்கிய எமது பயணத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தீவிரப் படுத்துகிறது.

‘தமிழர் தலைவிதி தமிழர் கையில்! பொதுவாக்கெடுப்புக்கோரும் மக்கள் அரங்கம்’

பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் அறிமுகமாகவும், அரசியல் அறிஞர்கள், ஆய்வாளர்களை உள்ளடக்கிய கருத்தரங்காகவும் அமையும் இம் மக்கள் அரங்கம் நிகழ்வினை உங்கள்முன் வைக்கிறோம்.

இடம் : Metropolitan Centre, 3840 Finch Ave E, Toronto ON M1T 3T4

காலம் : April 15, 2018 3:00 PM

அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.
பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மேலதிக தொடர்புகளுக்கு: 416-751-8483- ext 2, 416-830-4305, or referendum@tgte.org

Share This Post

Post Comment