ஸ்காபரோவில் ஆயுதமுனையில் கடத்தல்: பொதுமக்களுக்கு எச்சரிக்கை

Thermo-Care-Heating

poli2ஸ்காபரோவில் ஆயுத முனையில் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவத்தினை அடுத்து பாதுகாப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் இருவர், ஆண் ஒருவரை ஸ்காபரோ டோர்செட் பூங்கா பகுதியில் வைத்து வாகனம் ஒன்றினுள் பலவந்தமாக ஏற்றி, மூன்று வெவ்வேறு வங்கிகளுக்கு அவரை அழைத்துச் சென்று, அங்கிருந்து பணத்தினை பெற்றுத் தருமாறு வற்புறுத்தியுள்ளனர்.

கெனடி வீதி மற்றும் லோறன்ஸ் அவனியூ பகுதியில் புதன்கிழமை முற்பகல் 11.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

63 வயது ஆண் ஒருவரே இவ்வாறு கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், சந்தேக நபர்கள் இருவரும் கைத்துப்பாக்கி வைத்திருந்ததாகவும், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டே அவர் கார் ஒன்றினுள் ஏற்றப்பட்டு, மூன்று வங்கிகளுக்கும் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களின் அச்சுறுத்தலுக்கு கீழ்ப்படிந்த அந்த நபர், குறித்த ஒரு தொகைப் பணத்தின வங்கியிலிருந்து பெற்று சந்தேக நபர்களிடம் கையளித்துள்ளதாக தெரியவருகிறது.

இறுதியாக விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் எல்ஸ்மெயர் வீதிப் பகுதியில் காணப்பட்ட சந்தேக நபர்கள், பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும், அவர்கள் சுமார் 40 வயது மற்றும் 60 வயது மதிக்கத்தக்க வெள்ளை இன ஆண்கள் எனவும் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தினை அடுத்து பொதுமக்களுக்கான பாதுகாப்பு எச்சரிக்கையினை விடுத்துள்ள காவல்துறையினர், இவ்வாறான நிகழ்வுகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

குறித்த இந்த சம்பவம் தொடர்பில் அல்லது சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் அறிந்தோர், தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ideal-image

Share This Post

Post Comment