கன்சர்வேட்டிவ் கட்சியினரின் குற்றச்சாட்டுக்கு கனடிய அரசு மறுப்பு

Facebook Cover V02

can_flagகனடிய மக்களை தவறான வழியில் இட்டுச் செல்லும் முயற்சியில் கன்சர்வேட்டிவ் கட்சியினர் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடிய குடிவரவுத்துறை மற்றும் அகதிகள் தொடர்பான அமைச்சர் அஹமட் ஹசன் இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

அகதிகள் தொடர்பாக பிழையான தகவல்களை வழங்கி கனடிய பொதுமக்களை தவறான வழியில் இட்டு செல்ல கன்சர்வேட்டிவ் கட்சியினர் முயற்சிக்கின்றனர். எனினும் அவர்களினால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.

கனடாவை பொறுத்தவரையில் கடுமையான வலுவான குடிவரவுக் கொள்கையை கொண்டிருக்கிறது. இதன்மூலம் கனடிய மக்களையும் அகதிகளின் பாதுகாப்பையும் கனடா உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு உதாரணமாக சோமாலியாவில் இருந்து அகதியாக வந்த தாம், இன்று கனடாவின் அமைச்சராக செயற்படுவதையும் அஹமட் ஹசேன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடிய பிரதமர் அண்மையில் அகதிகள் தொடர்பில் டுவிட்டர் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். இதனையடுத்தே கனடாவுக்குள் அதிகமான அகதிகள் வருவதாக கன்சர்வேட்டிவ் கட்சி குற்றம் சுமத்தியிருந்தது.

இந்தநிலையில் இந்தக் குற்றச்சாட்டையும் கனடிய குடிவரவுத்துறை அமைச்சர் முற்றாக மறுத்துள்ளார்.

Share This Post

Post Comment