நோர்த் யோர்க் பகுதி தாக்குதல் – பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Facebook Cover V02

northyok_18நோர்த் யோர்க் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் சந்தேகநபர்களை கைதுசெய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

ஜேன் வீதி மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதியில், யோர்க் கேட் புலவார்ட்டில் அமைந்துள்ள உடற்பயிச்சிக் கூடம் ஒன்றுக்கு வெளியே, நேற்று (திங்கட்கிழமை) ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தின் போது மோசமான காயங்களுக்கு உள்ளான ஆண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த இந்த சம்பவ இடத்திலிருந்து இரண்டு சந்தேக நபர்கள் தப்பிச் செல்வது அவதானிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

இந்நிலையில், இச்சந்தேக நபர்கள் பற்றிய தகவல்கள் தெரியுமாயின் தங்களை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார், பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share This Post

Post Comment