கனடாவுடனான உறவு பலம் பெற்றுள்ளது டிரம்ப்

trump_can_pபுதிய பாதுகாப்புக் கொள்கையின் அடிப்படையில் பத்தாண்டுக்கான பாதுகாப்பு நிதியை பிரதமர் ஜஸ்ரின் ரூடோ 70 சதவீதம் உயர்த்தியுள்ளதன் மூலம், இரு நாடுகளுக்கிடையிலான உறவு பலம் பெற்றிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

மேலும், இதுவொரு சிறப்பான செயல் எனவும் அவர் கூறியதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் வெளியிடப்பட்ட கனடாவின் பாதுகாப்புக் கொள்கை மறுசீராய்வில் கனேடிய ஆயுதப் படைகளுக்கு ஆயுதம் தாங்கிய ஆளில்லா விமானங்களைக் கொள்வனவு செய்தல், இணையவழித் தாக்குதல்களை தடுத்து நிறுத்துவதற்கு புதிய நுட்பங்களை கையாளுதல் ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னொருபோதும் இல்லாத அளவில், கனடா தனது பாதுகாப்பு நிதியை தற்போது மூன்று மடங்கு அதிகரித்துள்ளமை அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Share This Post

Post Comment