தந்தையும், மகளும் தீயில் கருகி உயிரிழப்பு

Facebook Cover V02

fire-accidentகனடாவில் உள்ள ஒரு வீடு தீப்பிடித்து எரிந்த நிலையில் உள்ளே இருந்த தந்தை மற்றும் மகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Saskatchewan மாகாணத்தின் தென் கிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் ஒரு வீட்டில் வியாழன் அதிகாலை 2 மணிக்கு திடீரென தீப்பிடித்தது.

தீயானது மளமளவென பரவியதையடுத்து அதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தார்கள்.

ஆனால் அதற்குள் வீட்டுக்குள் இருந்த ரயன் ராவென் என்ற நபரும் அவரின் 4 வயது மகளான டனியிலா வியிபும் தீயில் சிக்கி உயிரிழந்தார்கள்.

டனியிலாவின் தாய் டெஸ்டினி வைப்புக்கு காயம் ஏற்பட்ட நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீப்பற்றியதற்கான காரணம் குறித்து இன்னும் தெரியாத நிலையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Share This Post

Post Comment