காசா தாக்குதல் – சுயாதீன விசாரணையை வலியுறுத்தியுள்ள கனடிய பிரதமர்

can_pm30காசா எல்லையில் இடம்பெற்ற தாக்குதல் சம்வம் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

கடந்த முதலாம் திகதி காசா எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலிய அரச படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 59 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் நூற்றுக் கணக்கானோர் படுகாயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலிய படைகளால் முன்னெடுக்கப்படட இந்த தாக்குதலின் போது, காயமடைந்த பாலஸ்தீனர்களுக்கு சிகிச்சை அளிக்க முயன்ற கனடிய மருத்துவர் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு்ளளது.

இந்த நிலையிலேயே குறித்த தாக்குதல் சம்வம் தொடர்பில் சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ரூடோ வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறு பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள மிக மோசமான பலப் பிரயோகத்தினையும், போர் ஆயுதப் பயன்பாட்டினையும் ஒருபோதும் மன்னிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதலின் போது கனடிய மருத்துவரான தாறெக் லோவ்பானி(Tarek Loubani) உட்பட, பெருமளவிலான நிராயுத பாணிகளான அப்பாவிப் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள், உதவிப் பணியாளர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் படுகாயமடைந்துள்ளமை குறித்து அதிர்ச்சியடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் குறித்த இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான உண்மை நிலவரங்களை அறிவதற்கு தாம் இஸ்ரேலிய அதிகாரிகளை தொடர்பு கொண்டுள்ளதாகவும் கனடியப் பிரதமர் கூறியுள்ளார்.

Share This Post

Post Comment