ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற கப்பல் அழிக்கப்படுகிறதா?

ekuruvi-aiya8-X3

boat_17ஈழ அகதிகளை கனடாவிற்கு ஏற்றி சென்ற எம்.வீ.சன்சீ என்ற கப்பலை அழிப்பது குறித்து, கனடா அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பல் தற்போது பிரிடிஷ் கொலம்பியா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அந்நாட்டு ஊடகங்கள், குறித்த கப்பலில் தற்போது மிருகங்கள் வசிப்பதாக தெரிவித்துள்ளன.

எனினும், அந்த கப்பலை என்ன செய்வது என்பது குறித்து அந்நாட்டு அரசாங்கம் இதுவரையிலும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 492 ஈழ அகதிகளுடன் இந்த கப்பல் கனடாவை வந்தடைந்த போது, பொலிஸார் குறித்த கப்பலை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment