இந்திய பாரம்பரிய முறையில் தீபாவளி கொண்டாடிய கனேடிய பிரதமர்

ekuruvi-aiya8-X3

can_pm_Diwaliஇந்துக்களின் பண்டிகைகளில் முக்கியமான ஒன்று தீபாவளி. அந்நாளில் மக்கள் புத்தாடை உடுத்தியும், இனிப்புகள் உண்டும் மகிழ்வர். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி கனடாவில் உள்ள இந்தியர்கள் ஒட்டாவா நகரில் தீபாவளியை சிறப்பாக கொண்டாடினர். அந்த விழாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் டுருடோ கலந்து கொண்டார். இந்திய பாரம்பரிய முறையில் ஷர்வானி அணிந்திருந்தார். நிகழ்ச்சியில் இந்திய தூதர் விகாஸ் ஸ்வரூப் கலந்து கொண்டார். ஜஸ்டின் அங்கிருந்த குத்து விளக்கை ஏற்றி வைத்தார்.

மேலும், ஜஸ்டின் தனது தீபாவளி வாழ்த்துகளை டுவிட்டரில் பதிவு செய்தார். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்த அவர், தீபாவளியை ஒட்டாவா நகரில் சிறப்பாக கொண்டாடி வருகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.

அவரின் வாழ்த்துகளுக்கு சமூக ஊடகங்களில் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். ஜஸ்டின் இது போல் பல இந்திய பண்டிகைகளை கொண்டாடி உள்ளார். பொங்கல் பண்டிகையில் போது ஜஸ்டின் அனைவருக்கும் தமிழில் வாழ்த்துக்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment