கனடாவில் தடுத்து வைக்கப்படும் மெக்சிக்கோ நாட்டினரின் எண்ணிக்கையில் உயர்வு

Thermo-Care-Heating

2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெக்சிக்கோவிற்கான விசா தளர்த்தப்பட்டதன் பின்னர் கனடாவில் தடுத்து வைக்கப்படும் மெக்சிகோ நாட்டினரின் எண்ணிக்கையில் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது புதியவர்களை வரவேற்பதில் கனடா முன் நிற்பதாகக் தன்னைக் காட்டிக்கொள்ளவும் முயல்கின்றது.

இவ்வருட ஏப்ரல் மாதத்தில் தடுத்துவைக்கப்பட்ட மெக்சிக்கோ நாட்டினரின் எண்ணிகை 331 ஆகும். கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 10 மடங்கு அதிகமானதாகும் என கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது, இவ்வருடம் மார்ச் மாதத்தில் அகதிக்கோரிக்கையை முன்வைத்த மெக்சிக்கோ நாட்டினரின் எண்ணிக்கை நான்கு மடங்காக அதிகரித்துள்ளதாகவும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

மெக்சிக்கோவிற்கான விசாக்கட்டுப்பாட்டை மீளவும் அறிமுகப்படுத்துமாறு எதிக்கட்சி அரசியல்வாதிகள் ஜஸ்டின் ரூடோவிற்கு அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த குடிவரவுத் திணைக்களப் பேச்சாளர் “மெக்சிக்கோ நாட்டிற்கான விசா தளர்த்தப்பட்டதன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம், சுற்றுலா, முதலீடுகள் போன்றன வலுவடையும் சந்தர்ப்பங்கள் உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் நீண்டகால அனுகூலங்கள் உள்ளதாகவும்” தெரிவித்தார்.

ideal-image

Share This Post

Post Comment