பாடசாலை பேரூந்து மீது மோதிய வாகனம்

school-bus16052018நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை பேரூந்து மீது மோதிய வாகனத்தில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று ஈட்டோபிக்கோ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

Thirteenth Street மற்றும் Lake Shore Boulevard பகுதியில் நேற்று இரவு 11 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குறித்த பாடசாலை பேருந்து மீது 23 வயது பெண் ஒருவர் செலுத்தி வந்த வாகனமே மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது, குறித்த அந்த வாகனத்தில் இருந்த 25 வயது ஆண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள நிலையில், வாகனத்தின் சாரதியான பெண்ணும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்துக்கு மது போதை காரணமாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ள போதிலும், குறித்த அந்த பெண் சாரதி மீது இதுவரை குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படவில்லை எனறு கூறப்படுகிறது. இந்த விபத்து இடம்பெற்ற வேளையில் குறித்த அந்த பேரூந்தில் எவரும் இருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.


Related News

 • பிரதமர் ட்ரூடோவின் எளிமையான சிங்கப்பூர் சுற்றுப் பயணம்
 • கனடாவில் அசாதாரண காலநிலை நீடிப்பு
 • குழந்தைகளின் உடல் உள ஆரோக்கியம் குறைவடைந்துள்ளது – புள்ளிவிபரம்
 • மூன்று திருடர்களை பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
 • பேருந்து ஒன்று மின்கம்பத்துடன் மோதி விபத்து
 • ஒஷ்வா பகுதியில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • புயல்காற்றின் எதிரொலி – அட்லான்டிக் பிராந்தியம் இருளில் மூழ்கியது
 • ஆசியான் தலைவர்களுடன் மதிய போசனத்தில் கலந்துகொண்டார் கனேடிய பிரதமர்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *