சிரியா மீதான தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை – பிரதமர்

sdsd

can_pm30சிரியா மீதான அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படை தாக்குதலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

பெருவுக்கான மூன்றுநாள் பயணத்தின் முடிவில் தலைநகர் லீமாவில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும், நாம் இந்த தாக்குதலுக்கான பலத்த ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளோம் எனவும் குறித்த தாக்குதல் திட்டம் தொடர்பில் கனடாவுக்கு நேரத்துடனேயே தெரியப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு வாரத்தின் முன்னர் சிரியாவின் டூமா நகரில் நடைபெற்றதாக சந்தேகிக்கப்படும் இரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் சிரியா மீது விமானத் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment