22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவை

ekuruvi-aiya8-X3

blood-1508கனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, எதிர்வரும் 12 நாட்களில் 22,000 அவசர இரத்ததான கொடையாளிகள் தேவைப்படுவதாக அறிவித்துள்ளது.

அனைத்து இரத்த வகைகளிற்கும் இணையாக கூடியதும், வைத்தியசாலைகளில் அவசர பரிமாற்றங்களிற்கு அடிக்கடி உபயோகிக்கப்படுவதுமான ழு- வகை இரத்தம் விசேடமாக தேவைப்படுவதாக கனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, மேலும் குறிப்பிட்டுள்ளது.

விடுமுறைகள் மற்றும் மீண்டும் பாடசாலைகள் செல்வதற்கான ஆயத்த பணிகள் காரணமாக கொடையாளிகளின் அளவு குறைவடைந்துள்ளதாக கனேடிய இரத்த சேவைகள் அமைப்பு, தெரிவித்துள்ளது.

இரத்ததான நன்கொடை நியமனங்கள் கனேடிய இரத்த சேவை இணையத்தளம் ஊடாகவும், அழைப்பை ஏற்படுத்துவதன் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், அனைத்து வைத்தியசாலைகளில் சென்று நன்கொடைகளை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment