பசுபிக் நாடுகளுக்கிடையிலான கூட்டாட்சி அறிமுகம் – NAFTA விற்கான புதிய நகர்வு

ekuruvi-aiya8-X3

nafta-14பசுபிக் நாடுகளுக்கிடையில் விரிவான மற்றும் முற்போக்கு கூட்டாட்சியினை உறுதிப்படுத்துவதற்கான சட்டமூலம் இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என கனெடிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் அமெரிக்கா தவிர்ந்த 11 நாடுகள் கையெழுத்திட்ட பிரதான வர்த்தக உடன்படிக்கையான CPPTP சட்டமூலம் அமுலுக்கு வரும்பட்சத்தில் NAFTA ஒப்பந்தத்திற்கான சாதகமான வழிகளை பெறலாம் என இன்று (புதன்கிழமை) அரசாங்கம் அறிவித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா, அவுஸ்ரேலியா, புருனே, சிலி, ஜப்பான், மலேசியா, மெக்ஸிக்கோ, நியூசிலாந்து, பெரு, சிங்கப்பூர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் ‘பசுபிக் நாடுகளுக்கு இடையில் விரிவான மற்றும் முற்போக்கான கூட்டாட்சியினை நடைமுறைப்படுத்தும் ஒரு சட்டம்’வரையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆரம்பத்தில் குறித்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையிலிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பின்பு 2017 இல் அது ‘ஒரு பேரழிவு’ எனக்கூறி அதிலிருந்து பின்வாங்கியிருந்ததும் மீண்டும் இந்த ஆண்டு அதனை விரும்புவதாகத் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment