கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் நிலையாகவே உள்ளது

ekuruvi-aiya8-X3

census-canகனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 1,100 வேலை இழப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும், வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் நிலையாகவே உள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையிலேயே குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கனடாவின் வேலையற்றோர் வீதம் தொடர்ந்தும் 5.8 சதவீதத்தில் நிலையாகவே உள்ளதாக அந்த அறிக்கையில் கோடிட்டு காட்டப்பட்டுள்ளது.

எனினும் ஊதியத் தொகையானது சுமார் ஆறு ஆண்டுகள் காணாத உச்சத்தினை கடந்த மாதத்தில் தொட்டுள்ளதாகவும், கடந்த மாதம் வழங்கப்பட்டுள்ள சராசரி ஊழியர் சம்பளத்தின் அளவானது, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன ஒபபிடுகையில் 3.6 சதவீதம் அதிகம் எனவும், 2012ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகியுள்ள அதிகளவு சம்பள வீதம் இது எனவும் கூறப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment