நிலத்தை நோக்கி வந்த மேகக்கூட்டத்தினால் பரபரப்பு

Facebook Cover V02

megam_14கனடாவில் நிலத்தை நோக்கிக் கீழிறங்கி வந்த மேகக்கூட்டங்களினால் அப்பிரதேசத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அல்பேர்டாவில் உள்ள லெவிட் கிராமத்தில் குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்கும் போதே குறித்த மேகக்கூட்டம் தரையில் இறங்கி வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

எனினும் சிறிது நேரத்தில் அது பெரும் மேகங்களாகத் திரண்டு சுனாமிப் பேரலை போல் தரைப்பகுதியை முற்றிலும் ஆக்கிரமித்தன. இதனை அப்பிரதேசவாசியான சயானா ஆல்சன் என்பவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த வீடியோக் காட்சி தற்போது அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment