டிரம்ப் ஒளிவு மறைவின்றி பேசக்கூடியவர் – கனடிய பிரதமர்

Thermo-Care-Heating

pm2அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மறைமுகமின்றி நேருக்கு நேராக பேசக்கூடியவர் என கனடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டிரம்ப் தன் பேச்சுகளிலும், வாக்குறுதிகளிலும் எப்போதும் உறுதியாக இருப்பவர் என பிரதமர் சுட்டிக்காட்டியதோடு, அமெரிக்காவின் துப்பாக்கி கலாச்சாரத்தை அவர் முற்றாக கட்டுப்படுத்துவார் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறியுள்ளார்.

எப்போதும் நாம் இருவரும் தொடர்பிலேயே உள்ளோம் எனக் கூறிய கனடிய பிரதமர், நாம் திட்டமிடும் செயல்களை உடனுக்குடன் செயல்படுத்தும் ஒருவராக டிரம்ப் காணப்படுகின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று கனடாவே அமெரிக்காவிற்கு சிறந்த நட்பு நாடு எனக் குறிப்பிட்ட ரூடோ, அந்த இடத்தினை வேறு எந்த நாடும் பூர்த்தி செய்ய முடியாது எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ideal-image

Share This Post

Post Comment