உலகின் 19 முழுமையான குடியரசு நாடுகளின் பட்டியலில் கனடாவுக்கு ஆறாவது இடம்

ekuruvi-aiya8-X3

can_flagஉலகின் 19 முழுமையான குடியரசு நாடுகளின் பட்டியலில் கனடா ஆறாவது இடத்தைப் பிடித்துள்ளது. பொருளியல் புலனாய்வு பிரிவின், 2017ஆம் ஆண்டுக்கான ஜனநாயக குறியீடு தர வரிசைப்பட்டியலில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முறை, சமத்துவம் அல்லது பல் கலாச்சார அங்கீகாரம், சிவில் சுதந்திரங்கள், அரசு செயல்படும் விதம் மற்றும் அரசியல் கலாச்சாரம் எனும் ஐந்து அளவீடுகளின் அடிப்படையில் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

முதல் இடத்தை நோர்வேயும், இரண்டாவது இடத்தை ஐஸ்லாந்தும், மூன்றாவது இடத்தை சுவீடனும் பெற்றுள்ளன.

தேர்தல் முறை மற்றும் அரசு செயல்படும் விதம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் கனடா இன்னும் அரசியல் பங்களிப்பில் முன்னேற வேண்டியுள்ளது. ஆனால் சிவில் சுதந்திரங்களைப் பொருத்தவரை கனடா 10க்கு 10 மதிப்பெண்கள் பெற்றுள்ளது.

10க்கு 9.15 மதிப்பெண்கள் பெற்று ஆறாவது இடத்தை பிடித்துள்ள கனடா, கடந்த 2016ஆம் ஆண்டு இதே மதிப்பெண்களைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment