கனடா வரவிருக்கும் இளவரசர் ஜோர்ஜ், இளவரசி சார்லட்

Facebook Cover V02

Williams_1309பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ் மற்றும் மனைவி கேட் தம்பதியினர், தங்கள் பிள்ளைகளான இளவரசர் ஜோர்ஜ் மற்றும் இளவரசி சார்லட் இருவரையும் அவர்களின் கனடா விஜயத்தின் போது அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இம்மாத இறுதியில் கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் யுகொன் ஆகிய பகுதிகளிற்கு அவர்கள் விஜயம் மேற்கொள்கின்றனர். அவர்களின் வருகைக்கான முழு விபரங்களையும் கெனிங்ஸ்ரன் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இளவரசர் வில்லியம், மனைவி கேட் மற்றும் பிள்ளைகள் இருவரும் செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி பிற்பகல் கனடா வருகின்றனர். குடும்ப விஜயம் விக்டோரியாவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

இதன்போது, முதல் நாள் முழுவதும் வன்கூவரில் கழிப்பர். அங்கு ஒரு உள்ளாட்சி வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் அவர்கள் மீண்டும் புதிதாக திறக்கப்பட்டுள்ள கிற்சிலானோ கரையோர பாதுகாப்பு நிலையத்திற்கு விஜயம் செய்வார்கள்.

தொடர்ந்து பெல்லா பெல்லா, Indian Reserve ஆகிய இடங்களிற்கும் செல்வர். கெலொனாவில் ஒரு நாளை கழிப்பர். செப்டம்பர் 27 வைற்ஹோசிற்கு செல்வார்கள். சிறுவர்களிற்கும் நிகழ்வுகளை திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Post

Post Comment