ரொறன்ரோ பகுதிகளில் 200 பொலிஸார் குவிப்பு

ekuruvi-aiya8-X3

toronto-policeரொறன்ரோ பகுதிகளில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் கண்காணிப்பதற்கு புதிய பொலிஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக குறித்த பகுதிகளில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள், பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதிகரித்துள்ளது.

இதனால், எதிர்வரும் காலங்களில் இரவில் மட்டும் 200 க்கும் மேற்பட்ட பொலிஸார் கடமையில் ஈடுபடவுள்ளதாக ரொறன்ரோவின் உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் அவர்கள் இரவு 7 மணி முதல் அதிகாலை 3 மணிவரைக்கும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும் கடந்த ஆண்டில் 212 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அதில் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதுமட்டுமன்றி நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 188 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் 17 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment