இலங்கை இளைஞரைத் தேடும் பணிகள் தொடர்கின்றன

ekuruvi-aiya8-X3

canada-navyகனடா, ஒன்ராறியோவின் ப்ளூப்பர்ஸ் பகுதியிலுள்ள கடலில் வீழ்ந்த இலங்கை இளைஞரைத் தேடும்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

குறித்த தேடுதல் பணிகள் கனடாவின் கடலோரப் பாதுகாப்புப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக டொராண்டோ தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளனர்.

மேலும் உலங்கு வானூர்திகள் மூலம் விசேடமான தேடுதல் பணிகளும் இடம்பெறுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கையைச் சேர்ந்த 27 வயதான பார்த்திபன் சுப்பிரமணியம் என்ற குறித்த இளைஞர் கனடாவில் களியாட்ட நிகழ்வுகளுக்கு இசை ஒருங்கிணைப்பாளராக வேலைபார்த்து வந்ததாக அவரது மாமனார் தெரிவித்திருந்தார்.

Share This Post

Post Comment