மிசிஸாகுவா பகுதியில் விபத்து: ஒருவர் படுகாயம்

Facebook Cover V02

canada-policeகனடா மிசிஸாகுவா பகுதியில் நேற்று (சனிக்கிழமை) மதியம் 4:41 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வீதியோரம் இருந்த மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் படுகாயமுற்றவர் 30 வயதுடைய ஆண் எனவும் அவர் தற்போது சிகிச்சைக்காக புனித மைக்கேல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த நபர் வேக கட்டுப்பாட்டினை இழந்து மரத்துடன் மோதியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்து காரணமாக, வீதியின் புனரமைப்பு மற்றும் விசாரணைகளுக்காக சிறிது நேரம் குறித்த போக்குவரத்து தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment