துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவனின் உடல் நிலையில் முன்னேற்றம்

ekuruvi-aiya8-X3

scap13ஸ்காபரோவின் மால்வேர்ன் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவனின் உடல்நிலையில், முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று (வியாழக்கிழமை) இரவு 10 மணியளவில் நீல்சன் வீதி மற்றும் டேப்ஸ்காட் வீதிப் பகுதியில், இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவர் படுகாயமடைந்தார்.

இதனைதொடர்ந்து, குறித்த சிறுவன் உடனடியாகவே சணிபுரூக் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டார். அந்த சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லும் போது உயிராபத்தான நிலையிலேயே இருந்ததாகவும், தற்போது உடல் நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் குறித்த சிறுவனின் பெயர், விபரங்கள் எதனையும் வெளியிடாத பொலிஸார், இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment