பழமைவாதக் கட்சியின் தலைவர் டக் ஃபோர்ட்டிற்கு கிறிஸ்டீன் எலியோட் வாழ்த்து

Facebook Cover V02

debateஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் வெற்றிபெற்ற டக் ஃபோர்ட்டிற்கு, சக போட்டியாளரான கிறிஸ்டீன் எலியோட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டக் ஃபோர்ட்டை நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) இரவு சந்தித்து பேசியதன் பின்னர், கிறிஸ்டீன் எலியோட் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு வாழ்த்து தெரிவித்தார். மேலும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, டக் ஃபோர்ட்டின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்கின்றேன். அவருடன் இணைந்து கத்தலின் வின்னை வெற்றி கொள்ளுவதற்கு தயாராகவுள்ளேன்.

இந்த தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் காணப்பட்டது. முடிவுகள் மிகவும் நெருக்கமாக இருந்ததன் காரணமாகவே முடிவுகளை மீளாய்வு செய்து கொள்வதற்கு 24 மணி நேரங்களை தமது குழுவினர் எடுத்துக் கொண்டனர்.

இந்த மீளாய்வுகளின் பின்னர், முடிவுகளில் தனக்கு முழுமையான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. டக் ஃபோர்ட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சியின் தலைவருக்கான தேர்தலில் கிறிஸ்டீன் எலியோட்டுடன் டக் ஃபோர்ட் போட்டியிட்டார். ஆனால் இறுதி முடிவுகளின் படி, கிறிஸ்டீன் எலியோட் 153 புள்ளிகள் குறைவாக பெற்று தோல்வியை தழுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment