கடும் குளிரின் மத்தியிலும், உயிர்நீத்த தியாகிகள் நினைவுகூரல்

ekuruvi-aiya8-X3

ku2தற்போது ஆரம்பமாகியுள்ள கடும் குளிரின் மத்தியிலும், ஆயிரக்கணக்கான கனேடியர்கள் ஒன்றுகூடி, இதுவரை காலமும் நாட்டுக்காக தமது உயிர்களைத் தியாகம் செய்த படை வீரர்களை நினைவு கூர்ந்துள்ளனர்.

கனேடிய தேசிய நினைவுகூரல் நாள் நேற்ற கடைப்பிடிக்கப்படும் நிலையில், கனடாவில் மட்டுமின்றி, உலகின் பல நாடுகளிலும் கனேடிய வீரர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் நேற்று ஒட்டாவா தேசிய போர் நினைவுச் சதுக்கத்தில் இடம்பெற்ற பிரதான நினைவேந்தல் நிகழ்வில், பனிக் குளிரின் மத்தியிலும் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடியுள்ளனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய மூத்த இராணுவ அதிகாரியான பிரிகேடியர் ஜெனரல் கை சப்டலேய்ன், போர்களில் பங்குபற்றிய இராணுவ வீரர்களில் பலர், போரின் போதும் அதன் பின்னரும் மனோரீதியான பாதிப்புகளை எதிர்கொண்டு, தற்கொலை செய்துகொள்ளும் நிலைமை தொடர்பில் கரிசனை வெளியிட்டுள்ளார்.

போர்களின் போது படை வீரர்கள் வெளிப்படையான காயங்களுக்கு மட்டுமின்றி, வெளித் தெரியாத காயங்களுக்கும் உள்ளாகின்றனர் என்பதையும், அதன் வெளிப்பாடாகவே இவ்வாறான தற்கொலைகள் இடம்பெறுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2010ஆம் ஆண்டில் இருந்து இதுவரை இவ்வாறு 130 இராணுவ வீரர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பதுடன், இந்த ஆண்டில் மட்டும் ஓகஸ்ட் வரையான காலப்பகுதியில் அவ்வாறு எட்டுப் பேர் தற்கொலை செய்து கொண்டுளளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில், உயிரிழந்தோருக்காக மட்டுமின்றி, தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டோர், மற்றும் அவ்வாறான மனோநிலையில் உள்ளோருக்காகவும் தாம் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment