கனடாவில் அகதி அந்தஸ்து பறிபோகும் நிலையில் இலங்கையர்

Thermo-Care-Heating

can_flag1கனடாவிலிருந்து இலங்கை வந்து சென்ற ஒருவரின் கனேடிய அகதி அந்தஸ்து நீக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. இது தொடர்பான  வழக்கினை விசாரிப்பதற்கு கனேடிய உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

வன்கூவரில் நிரந்தர குடியுரிமை பெற்ற நஸ்ரின் அஹமட் மொஹமட் நிலாம் என்பவருக்கே இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கையைச் சேர்ந்த இவர், கடந்த 2008 ஆம் ஆண்டு கனடா சென்று 2011 இல் கனேடிய குடியுரிமையை பெற்றுள்ளார். அதன்பின்னர் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டில் என இருதடவைகள் இலங்கை வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், இலங்கைக்கு இரு தடவைகள் சென்று பாதுகாப்பாக கனடா திரும்பியுள்ளமையால் அவருக்கு இலங்கையில் எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்ற தீர்மானத்தினை கனேடிய கனேடிய குடிவரவு குடியகல்வு திணைக்களம் எடுத்துள்ளது.

அதற்கேற்ப கடந்த 2012 ஆம் ஆண்டின் கனேடிய அரசாங்கம் நடைமுறைப்படுத்திய அகதிகள் சட்டத்திருத்தங்களின் அடிப்படையில் அவரது குடியுரிமை பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது குடியுரிமை விண்ணப்பத்தை கூட்டாட்சி அரசாங்கம் செயல்படுத்த வேண்டும் என மொஹமட் நிலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.

ideal-image

Share This Post

Post Comment