சிரியா அகதிகளின் விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதில் தேக்கம்

Thermo-Care-Heating

siriya_canகனடாவிற்குள் அகதிகளாக வருவதற்காக விண்ணப்பித்த 30,000 சிரிய அகதிகளின் விண்ணப்பங்கள் தேக்கநிலையில் உள்ளதாகத் தெரியவந்துள்ளது. அடுத்த வருடம் கனடாவினுள் அனுமதிக்கப்பட உள்ள அகதிகளின் மொத்த எண்ணிக்கை இவ்வருட இலக்கை விட மிகவும் குறைவானதால், அவர்களின் காத்திருப்புக் காலம் மிகவும் நீண்டதாக மாறும் சாத்தியம் காணப்படுகிறது.

கனேடிய குடிவரவுத் திணைக்க
ளத்தின் தரவுகளின்படி, 4,264 சிரிய அகதிகள் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு கனடாவினுள் அனுமதிக்கப்பட ஆயத்தமான நிலையில் உள்ளனர்.

மேலும் 25,756 சிரிய அகதிகளின் விண்ணப்பங்கள்  இறுதிக்கட்டப் பரிசீலனைக்காகக் காத்திருக்கின்றன.

கடந்த 12 மாதங்களில் அரச அனுசரணையுடன் (government sponsored) அனுமதிக்கப்பட்ட அகதிகளின்  எண்ணிக்கை 18,000 ஆக இருந்தது. இத்தொகை 2017 ஆம் ஆண்டில் 7,500 ஆகக் குறைவடையும்.

ideal-image

Share This Post

Post Comment