கனேடிய சிறுமி கொலை – புகலிடக் கோரிக்கையாளர் கைது

ekuruvi-aiya8-X3

marissaகனடாவில் 13 வயது சிறுமி மரிசா ஷென் கொலையுண்ட வழக்கில் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிரியாவிலிருந்து கடந்த 17 மாதங்களுக்கு முன்னர் புகலிடம் கோரி கனடாவிற்குள் நுழைந்த இப்ராஹிம் அலி (வயது-28) என்பவரே பெர்னபியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலையுண்ட சிறுமி மரிசா ஷென் கடந்த 2017ஆம் ஆண்டு ஜுலை 18ஆம் திகதி காணாமற்போயிருந்தார். காணாமற்போன சிறுமி கொலைசெய்யப்பட்ட நிலையில், மறுநாள் காலை பேர்னபி பூங்காவில் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானாரா என்பது போன்ற கேள்விகளுக்கு பொலிஸார் எவ்வித பதிலும் வழங்கவில்லை. இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share This Post

Post Comment