ஒட்டாவாவில் அதிகரிக்கும் கார் திருட்டு

Facebook Cover V02

car-theftஒட்டாவாவில் மட்டும் இதுவரை 35 ஆடம்பர வாகனங்கள் திருடப்பட்டுள்ளதாக, ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக திருடர்கள், லெக்ஸஸ் ரக வாகனங்களையே குறி வைப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

திருடர்கள், ‘relay box’ எனப்படும் ஒரு உயர்-தொழில் நுட்ப சாதனத்தை பயன்படுத்தி, இத்தகைய திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவதாகவும், இச்சாதனத்தை உபயோகித்து திருடும் போது எச்சரிக்கை ஒலி ஒலிக்காது எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

எனினும், குறித்த திருட்டு சம்பவங்களை கட்டுபடுத்துவதற்கும், திருடர்களை கைதுசெய்வதற்கும் தற்போது தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Share This Post

Post Comment