உடல் உறுப்புக்களை தானம் செய்த உயிரிழந்த ஹாக்கி வீரர்

Facebook Cover V02

Humboldt-Broncosபேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்த ஜுனியர் ஹாக்கி வீரர் ஹம்போல்ட் புரொன்கோஸ் (Humboldt Broncos) தனது உடலுறுப்புக்களை தானம் செய்துள்ளமை கனடா மக்களிடத்தில் நெகிழ்ச்சியான தருணங்களை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இவரது முன்மாதிரியைப் பின்பற்றி இதுவரை 182 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடலுறுப்புத் தானம் செய்துள்ளதாக கனடா அதெிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அவரது உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொண்டவர்கள் அவருக்கு நன்றியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேவேளை யாரும் எதிர்பாராத திருப்பமான கடந்த இரு வாரங்களுக்குள் உடலுறுப்புக்களைத் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளதாக பிரிட்டிஸ் கொலம்பியாவின் உறுப்பு தான அமைப்பின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதுவரை 363 பேர் உடலுறுப்பு தானத்திற்காக பதிவுசெய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல் ஒன்ராரியோவில் உறுப்பு தானம் செய்வோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.

இந்த முன்மாதிரியான செயற்பாடு கனடா வாழ் மக்கள் மட்டுமின்றி உலக மக்களின் மனங்களில் நெகிழ்ச்சியான தருணத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment