அல்பேட்டாவில் வாள் வெட்டு: வயோதிகப் பெண்மணி காயம்

Facebook Cover V02

sword_1103தெற்கு அல்பேட்டாவில் வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிகப் பெண்மணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கரி பிராஹ் கிறேக் மேற்கு பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் 19 வயது இளைஞன் ஒருவன் கைழ செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் எவையும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை.

அந்தத இளைஞன் வாள் வெட்டுக்கு இலக்கான வயோதிகப் பெண்ணுக்கு உறுவினர் என்றும் ஒரே வீட்டில் இருந்தாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாக்குதலுக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Post

Post Comment