மிசிசாகாவில் சந்தேக நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம்

Thermo-Care-Heating

miss_102மிசிசாகா பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹூறொன்ராறியோ வீதி மற்றும் எக்ளிங்டன் அவனியூ பகுதியில், நேற்று இரவு 10.30 அளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த அந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்திலிருந்து வெற்றுத் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ள போதிலும், அதன் போது எவரும் காயமடைந்ததாக இதுவரை முறைப்பாடுகள் எவையும் கிடைக்கவில்லை என்று பீல் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் இரண்டு வாகனங்கள் தொடர்புபட்டுள்ளதாக நம்புவதாகவும், எனினும் தாம் சம்பவ இடத்தினைச் சென்றடைவதற்கு முன்னர் அந்த இரண்டு வாகனங்களும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையினர் தற்போது சம்பவ இடத்தில் ஆதராங்களையும், சாட்சியங்களிடம் இருந்து தகவல்களையும் திரட்டும் நடவடிக்கையை முன்னெடுத்து வருவதுடன், தொடர் விசாரணைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ideal-image

Share This Post

Post Comment