வின்னிபெக்கில் விமான விபத்து

vinnibackவின்னிபெக்கில் சிறிய ரக விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த அந்த விமானம் அதன் உரிமையாளருக்கு தெரியாமலேயே எடுத்துச் செல்லப்பட்டதாகவும், வின்னிபெக்கின் வடபகுதியில் உள்ள சிறிய விமானிநலைய பகுதியில் அது வீழ்ந்து நெருங்கியதில், அதனை செலுத்தச் சென்றவர் உயிரிழந்து விட்டதாகவும் கனேடிய மத்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ஒன்ராறியோவின் தண்டர் பே பகுதியைச் சேர்ந்த 29 வயது ஆண் எனவும், அவர் ஓட்டுனர் உரிமம் பெற்ற விமானி எனவும், அவருக்கு குறித்த அந்த விமானத்தின் உரிமையாளரை முன்னரே தெரியும் என்றும் கூறப்படுகிறது.

குறித்த அந்த விமானம் அங்குள்ள நெடுஞ்சாலை 8 பகுதியில் வீழந்து நெருங்கி விபத்துக்குள்ளான நிலையில், வின்னிபெக் வடக்கிலிருந்து கிம்லி செல்லும் வீதியின் இரண்டு திசை நோக்கிய வழித்தடங்களும் மூடப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கனேடிய மத்திய காவல்துறையினரும், கனேடிய போக்குவரத்து பாதுகாப்பு சபையினரும் இணைந்து இநத சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் நிலையில், இந்த விபத்தின் போது விமானத்தில் விமானியைத் தவிர வேறு எவரும் இருக்கவில்லை என்று தெரியவருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

Share This Post

Post Comment