ரொறன்ரோவின் துப்பாக்கி வன்முறைகளை கட்டுப்படுத்த ஒன்ராறியோ நிதியுதவி

ekuruvi-aiya8-X3

toronto-guns-10துப்பாக்கி வன்முறைகள் மற்றும் குழு மோதல்களை எதிர்த்து போராடுவதற்காக ரொறன்ரோ பொலிஸ் மற்றும் நீதிமன்றங்களுக்கு ஒன்ராறியோ அரசாங்கத்தினால் 25 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்படவுள்ளது.

சமீப காலமாக அதிகரித்துவரும் வன்முறைகளை சமாளிக்கும் வகையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த நான்கு ஆண்டுகளாக இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட பணத்தை கொண்டு இந்த வன்முறைகளுக்கான மூல காரணங்களையேனும் கண்டறிய முடியவில்லை என பலரும் இந்த நடைமுறையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

ரொறன்ரோவில் துப்பாக்கி வன்முறைகள் இந்த ஆண்டு மிகவும் அதிகரித்து காணப்படுவதுடன், கடந்த ஜுலை மாதத்தில் மாத்திரம் துப்பாக்கி வன்முறைகளால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

எனவே, இனியும் பேசிக் கொண்டிருக்க நேரம் இல்லை என்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துள்ளது எனவும் ஒன்ராறியோ பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Share This Post

Post Comment