வைரத்தை மோசடி செய்தருக்கு பொலிஸார் வலைவீச்சு

ekuruvi-aiya8-X3

diamond_fraudஒரு மில்லியன் டொலர்கள் பெறுமதியான வைரத்தை மோசடி செய்த ஒருவரை கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

குறித்த சந்தேகநபர், 45-50 வயதுடையவர் எனவும் 5.10 உயரம் கட்டையான கறுப்பு முடி கொண்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், கடைசியாக காணப்பட்ட போது பழுப்பு நிற சட்டையும் இருண்ட காற்சட்டையும் அணிந்திருந்ததோடு கிப்பா எனப்படும் ஒலிவ் நிற விளிம்பற்ற தொப்பியும் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், மோசடி சம்பவம் குறித்து பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

61வயதுடைய மனிதரொருவர் உதிரி மற்றும் வண்ண வைரங்களை விற்பதற்காக குறிப்பிட்ட சந்தேக நபருடன் ஒழுங்குகளை செய்துள்ளார். சந்தேக நபரும் தான் ஒரு வைத்தியர் என கூறி கீல் வீதி மற்றும் வில்சன் அவெனியு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சந்தித்துள்ளார்.
இதையடுத்து ஒரு மில்லியன் டொலர்கள் பெறுமதியான வைரத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், காசோலை ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் காசோலை போலியானதென தெரியவந்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது இச்சம்பவம் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், இம் மோசடி குறித்த தகவல் தெரிந்தவர்கள் தங்களை உடனடியாக தொடர்பு கொள்ளுமாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Share This Post

Post Comment