கனடாவிற்கான சேவையை நிறுத்துவதாக சவுதி எயர்லைன்ஸ் அறிவிப்பு

Saudi-airlinesகனடாவிற்கான தனது பயணிகள் விமான சேவைகளை நிறுத்துவதாக சவுதி எயர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

கனடாவிற்கும், சவுதி அரசாங்கத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராஜதந்திர முறுகல் நிலையின் எதிரொலியாகவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று(செவ்வாய்கிழமை) காலை தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக சவுதி எயர்லைன்ஸ் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 13ஆம் திகதியுடன் கனடாவுக்கான மற்றும் கனடாவிலிருந்து புறப்படும் தமது அனைத்து சேவைகளும் நிறுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சவுதி எயர்லைன்சின் இந்த அறிவிப்பு தொடர்பில் கனேடிய போக்குவரத்து அமைச்சு இதுவரை எந்தவித கருத்துகளையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






Related News

  • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
  • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
  • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
  • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
  • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
  • உளுக்கு, சுளுக்கு, வாதம்
  • பெண்ணை கொடூரமாக கொலை செய்த ஒருவர் கைது
  • களைகட்டும் தேர்தல் திருவிழா
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *