டக் ஃபோர்ட்டின் முடிவு ஏமாற்றமளிக்கின்றது – தான்யா அலென்

Facebook Cover V02

dough_thanya-alenபழமைவாதக் கடசித் தலைவர் டக் ஃபோர்ட்டின் முடிவு, தன்னை மிகவும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தான்யா கிரானிக் அலென் தெரிவித்துள்ளார்.

ஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சி சார்பில், எதிர்வரும் ஒன்ராறியோ சட்டமன்ற தேர்தலில் மிசிசாகா மத்திய தொகுதியில் போட்டியிடவிருந்த தான்யா கிரானிக் அலென், அந்த வேட்பாளர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கு கடந்த 2013ஆம் ஆண்டு தான்யா அலென் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களே காரணம் என கட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், குறித்த இந்த விடயம் தொடர்பிலும், ஒன்ராறியோ அரசியல் குறித்தும் எதிர்வரும் சில நாட்களில் பல்வேறு விடயங்களை தெரிவிக்க வேண்டியுள்ளதாக தான்யா அலென் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment