பெற்றோர், பேரன் பேத்தி ஆகியோரை வரவழைத்தல் தொடர்பாக அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்ட மனு

ekuruvi-aiya8-X3

immi_minister22017 ஆம் ஆண்டில் தங்கள் பெற்றோர், பேரன் பேத்தி ஆகியோரைக் கனடாவிற்கு வரவழைக்கும் பொருட்டு விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்காகத் தயார் நிலையில் இருந்த பலர், குலுக்கல் மூலம் விண்ணப்பங்களைத் தெரிவு செய்யும் திட்டம் திடீரென அறிமுகம் செய்யப்பட்டதால் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்துள்ளனர்.

இப்புதிய திட்டத்தின் அறிமுகம் பற்றி எதுவித முன்னறிவித்தலும் கொடுக்கப்பட இல்லை எனவும் குடும்ப மீளிணைவு குலுக்கல் மூலம் தீர்மானிக்கப்படுவது நகைப்புக்குரியதொன்றாகும் எனவும் பலரால் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.

மேற்குறிப்பிட்ட இக்காரணங்களை முன்வைத்து கனேடியக் குடிவரவு அமைச்சரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.  இம்மனுவில் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

  1. ஒரு பரிபூரணமான திட்டம் அறிமுகப்படுத்தப்படும் வரை 2016 டிசம்பர் மாதத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களை ரத்துச்செய்தல், அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவிக்க மக்களுக்குச் சந்தர்பம் ஏற்படுத்திக் கொடுத்தல்.
  2. மாற்றங்களைக் கட்டம் கட்டமாக அறிமுகப்படுத்துவதன் மூலம் 2017 ஆம் ஆண்டு தயார் நிலையில் இருந்தவர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வழிசெய்தல்
  3. குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்படாதவர்களுக்கு, அடுத்த தடவை முன்னுரிமை வழங்குதல்.

Share This Post

Post Comment