றொரன்ரோ நகர சபை உறுப்பினராக இலங்கைத் தமிழர்

Thermo-Care-Heating

neethanறொரன்ரோ நகர சபை உறுப்பினராக இலங்கைத் தமிழரான நீதன் ஷான் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்காபரோ – ரூஜ்ரிவர் வார்ட் இலக்கம் 42இல் அண்மையில் நடைபெற்ற இடைத் தேர்தலில் 4,763 வாக்குகளை பெற்று நீதன் ஷான் உறுப்பினராகியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

29 வேட்பாளர்கள் போட்டியிட்ட இந்தத் தேர்தல், நீதனுக்கு அடுத்தபடியாக ஸுஹைர் செய்யத் 1,452 வாக்குகளையும், முன்னாள் நகரசபை உறுப்பினர் ரேமன்ட் சோவின் உதவியாளர் ராச் ஐநெஜியான் 1,055 வாக்குகளையும் பெற்றனர்.

பதினாறு வயதில் அகதியாக கனடாவுக்கு இடம் பெயர்ந்த நீதன், பன்மொழி ஆசிரியராகக் கடமை புரிந்தவர் ஆவார்.

ideal-image

Share This Post

Post Comment