ரயிலில் இரண்டு நாய்களுடன் பயணம் செய்ய தடை

Thermo-Care-Heating

dog2கனடாவில் பெண் ஒருவருக்கு ரயிலில் இரண்டு நாய்களுடன் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதுடன், ஒரு நாய்க்கு மட்டுமே அனுமதி அளிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Emily Sadowski என்னும் பெண், தன் இரண்டு நாய்களுடன் ரயிலில் ஏற முயன்றபோது, ரயில்வே அதிகாரிகள் ஒரு நாயுடன் மட்டுமே பயணம் செய்ய அனுமதி உள்ளது என தெரிவித்துள்ளனர்.

ஆனால் Emily, ஒரு நாய் மட்டும் தான் தன்னுடையது என்றும், மற்றொரு நாயை வேறு ஒரு நபருக்கு விற்பதற்காகவே கொண்டு செல்வதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், அதிகாரிகள் அவரை பயணம் செய்ய அனுமதி அளிக்கவில்லை. இது குறித்து Emily Sadowski கூறுகையில், ‘நான் இதற்கு முன்பும், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இதே போல இரண்டு நாய்களுடன் பயணம் செய்திருக்கிறேன்.

அப்போது எனக்கு எந்த தடையும் விதிக்கவில்லை. ஆனால், இம்முறை எனக்கு அனுமதி மறுக்கப்படுவதைப் பார்க்கையில், கடந்த முறை எனக்கு தவறுதலாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.

ஆனால், இம்முறை அதிகாரிகள் எனது வேண்டுகோளினை மறுபரிசீலணை செய்ய தயாராக இல்லை. எனினும், ஏற்கனவே இரண்டு நாய்களுடன் நான் வெற்றிகரமாக பயணம் செய்து நிரூபித்துள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக, கனடாவின் போக்குவரத்து அமைப்பு கூறுகையில், ‘கனடாவின் போக்குவரத்து சட்டத்தின்படி, ஒரு நபர் தனது துணைக்காகவோ அல்லது பாதுகாப்புக்காகவோ ஒரே ஒரு நாயை மட்டும் கூட்டிக்கொண்டு ரயிலில் பயணம் செய்யலாம்.

இந்த விதிமுறை கனடாவின் போக்குவரத்து வலைத்தளத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த நிகழ்வு அந்த பயணிக்கு சிரமத்தினை ஏற்படுத்தியிருப்பதால் நாங்கள் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளது.

ideal-image

Share This Post

Post Comment