என்.டி.ஆர். வாழ்க்கைப்படத்தில் நடிப்பதில் பெருமை – ராணா

Facebook Cover V02
rana_07பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கில் உருவாகும் இந்த படத்தில் என்.டி.ராமாராவ் மகன் பாலகிருஷ்ணா அவருடைய அப்பா என்.டி.ஆர். வேடத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் என்.டி.ராமாராவின் மனைவி பசவதாரகம் வேடத்தில் வித்யாபாலனும், ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்கும், சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷூம் நடிக்க இருக்கின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கதாபாத்திரத்தில் ராணா டகுபதி நடிக்க இருக்கிறார். நாயுடு கதாபாத்திரத்தில் நடிப்பதில் பெருமை என்று ராணா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share This Post

Post Comment