முதியவரை காப்பாற்றும் முயற்சியில் உயிரிழந்த இளைஞர்

can_061கனடாவில் முதியவர் ஒருவரை, துப்பாக்கிச்சூட்டில் இருந்து காப்பாற்றிய இளைஞர் தோட்டா துளைத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ஹாமில்டனின் Central lower city-யில் முதியவர் ஒருவரை, இரண்டு நபர்கள் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அப்போது Al-Hasnawi என்னும் இளைஞர், முதியவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.
ஆனால், அந்த மர்ம நபர்கள் Al-hasnawi-யை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் சம்பவ இடத்திலேயே அந்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

Yosif Al-Hasnawi என்னும் அந்த 19 வயது இளைஞரின் குடும்பம், கடந்த 2008ஆம் ஆண்டு ஈராக்கில் இருந்து கனடாவிற்கு குடியேறியுள்ளனர். குடும்பத்தின் மூத்த பிள்ளை Hasnawi ஆவார். Al-Mustafa Islamic Centre-யில் மத விழா ஒன்றில் பங்கேற்று விட்டு திரும்பியபோது தான் Al-Hasnawi-க்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை இரவு, Al-Hasnawi-யின் இறுதிச்சடங்கில் பங்குயேற்ற மக்கள், மிகவும் உணர்ச்சி பொங்க தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

பலர், மலர்கொத்துகளை வைத்து அந்த இளைஞருக்கு அஞ்சலி செலுத்தினர். மேலும், அவர்கள் ’Al-Hasnawi தங்களின் கதாநாயகன்’ எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இன்னொரு நபரை தேடி வருகின்றனர்.
தடகள வீரரான Yosif Al-Hasnawi, குத்துச்சண்டை மற்றும் கூடைபந்தாட்டத்திலும் சிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






Related News

  • விமானி அறைக் கண்ணாடி உடைந்ததால் அவசரமாக தரையிறங்கிய விமானம்
  • சட்டவிரோத கஞ்சா விற்பனை – 5 மருந்தகங்கள் சுற்றிவளைப்பு!
  • ஹமில்டனில் துப்பாக்கிச் சூடு – பெண்ணொருவர் உயிரிழப்பு
  • கென்னடி ஸ்டேஷன் பகுதியில் கத்திக்குத்து – ஒருவர் உயிரிழப்பு
  • ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி
  • சாஸ்கடூன் தீவிபத்தில் உயிரிழந்தவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்
  • அமிர்தசரஸ் ரயில் விபத்தில் சொந்தங்களை இழந்தவர்களுக்கு கனேடிய பிரதமர் ஆறுதல்
  • உளுக்கு, சுளுக்கு, வாதம்
  • Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked as *

    *