வாகன கடத்தல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

ekuruvi-aiya8-X3

arrest_07மொன்றியலில் வாகன கடத்தல் மற்றும் பெண்ணொருவரின் உயிரை காவுகொண்ட இரட்டை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் 21 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சந்தேக நபரிடம் புலனாய்வாளர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை எரிபொருள் நிலையமொன்றின் வாகன நிறுத்தத்தில் வைத்து காரில் வந்த பெண்ணொருவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்த சந்தேக நபர் பின்னர், குறித்த காரிலேயே தப்பி சென்றுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 49 வயதுடைய பெண், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அன்றிரவே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டு காரில் தப்பிச் சென்ற சந்தேக நபர் விபத்துக்குள்ளான நிலையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர். பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் சிறு காயங்களுக்கு உள்ளான நபருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Post

Post Comment