முதல் முறையாக மொன்றியல் நகர மேயராக பெண் தெரிவு

mayor_06மொன்றியல் நகரின் முதல் பெண் மேயராக Valerie Plante தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கனடாவின் மொன்றியல் நகருக்கான நகராட்சி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் மேயர் வேட்பாளர்களாக லிபரல் கட்சியை சேர்ந்த Denis Coderre, பிராஜெக்ட் மொன்றியல் கட்சியை சேர்ந்த Valerie Plante மற்றும் இருவர் என நான்கு பேர் களத்தில் இருந்தனர்.

51 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்ற Valerie Plante மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

Denis-க்கு 46 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளது.

இதன் மூலம் மொன்றியல் நகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமைக்கு Valerie Plante சொந்தகாரராகி உள்ளார்.

Valerie Plante celebrating her win #decision2017 pic.twitter.com/j9h4ux83DA
— Amanda Jelowicki (@JelowickiGlobal) November 6, 2017

தனக்கு ஆதரவுத்த மக்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் Valerie Plante டுவிட்டர் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

Valerie-ன் வெற்றியை அவரின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகிறார்கள். அவரின் வெற்றிக்கு கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் டுவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் Valerie தான் வெற்றி பெறுவார் என கூறப்பட்டிருந்த நிலையில் அதுவே மக்களின் தீர்ப்பாகவும் இருந்துள்ளது.

அரசியலில் கடந்த 2013-ல் நுழைந்த Valerie ஏற்கனவே நகர கவுன்சிலராக பதவி வகித்துள்ளார். அவரை எதிர்த்து தோல்வியடைந்துள்ள Denis அமைச்சராகவும், எம்.பி-ஆகவும் பதவி வகித்துள்ள நிலையில் கடந்த 2013-லிருந்து மொன்றியல் மேயராக பணியாற்றி வந்தார்.

தன்னை மேயராக தெரிவு செய்தால் நகரின் பொது போக்குவரத்தை மேம்படுத்துவேன் எனவும், நகரின் பல இடங்களை பச்சை பசுமையாக மாற்றுவேன் எனவும் Valerie பிரச்சாரத்தின் போது உறுதியளித்திருந்தார்.

மேயராக பணியாற்றிய Denis மொன்றியல் நகரின் 375-வது பிறந்தநாளை மில்லியன் கணக்கில் செலவு செய்து வெகு விமர்சியாக கொண்டினார்.

அதோடு, Pit bull எனப்படும் நாய் வகைகளை மொன்றியலில் தடை செய்தார். இதன் காரணமாக நகர மக்கள் Denis மீது அதிருப்தியில் இருந்த நிலையிலேயே தேர்தலில் அவர் தோல்வியை தழுவியுள்ளார்.

Congratulations @Val_Plante, first-ever woman elected mayor of Montreal! I’m looking forward to working together on our shared priorities.

— Justin Trudeau (@JustinTrudeau) November 6, 2017


Related News

 • சட்டவிரோத போதைப்பொருள் பாவனை – கனடாவில் நாளொன்றுக்கு 10 பேர் உயிரிழப்பு
 • அர்வாவில் விபத்து – ஒருவர் உயிரிழப்பு
 • ரொறன்ரோ பகுதியில் வாகன விபத்து – பெண்ணொருவர் உயிரிழப்பு
 • மிசிசாகுவா பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன
 • கஷோகி விவகாரம் – துருக்கியின் ஒலிப் பதிவுகளை செவிமடுத்ததாக கனடா ஒப்புதல்
 • அதிகரித்த போதைப்பொருள் பாவனை காரணமாக ஐவர் உயிரிழப்பு
 • வின்னிபெக்கில் துப்பாக்கி பிரயோகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
 • மிசிசாகாயில் துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் படுகாயம்
 • Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked as *

  *