கடந்த மாதம் கனடாவில் 44,000 வேலைவாய்ப்புக்கள்

ekuruvi-aiya8-X3

can_0611_1கடந்த மாதம் கனடாவில் 44 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாவும், அவை பகுதி நேர வேலைவாய்ப்புக்களே எனவும் புள்ளிவிபரங்கள் வாயிலாக அறிய முடிகின்றது.

கனடாவின் புதிய வேலை வாய்ப்புக்கள் குறித்து நேற்று முன்தினம் (வெள்ளிக் கிழமை) வெளியிடப்பட்ட புதிய புள்ளிவிபரங்களிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த புள்ளவிபரங்களின் படி, மேலதிக பகுதி நேர அதிகரிப்பினால் ஒட்டு மொத்த அதிகரிப்பு உந்துதல் அடைந்து 67 ஆயிரம் ஆக உயர்ந்துள்ளது. இதே நேரம் முழு நேர வேலை வாய்ப்பு 23 ஆயிரத்தால்; வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி பெரும்பாலான மக்கள் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளதால், வேலையின்மை ஒரே நிலையில் 7.0 சதவிகிதமாகவே நிலை பெற்றுள்ளது.

ஒரு வருடத்தின் முன்னைய நிலைமையுடன் ஒப்பிடும் போது, ஒக்டோபர் மாதத்தில் 140,000 மேலதிக வேலைவாய்ப்புக்கள், 16 ஆயிரம் முழு நேர வாய்ப்புக்கள் அதிகரிப்பு மற்றும் 124,000 பகுதி நேர வேலை வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பொருட்கள் உற்பத்தி துறையில் ஏறக்குறைய 21 ஆயிரம் வேலை வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன. கட்டுமான துறையில் 24 ஆயிரம் அதிகரிப்புக்கள் ஏற்பட்டுள்ளது. இதேபோல இயற்கை வளங்கள் துறையில் 10 ஆயிரம் அதிகரிப்புக்கள் காணப்படுகின்றது.

சேவைகள் மற்றும் உற்பத்தி துறையில் 23 ஆயிரமும், மொத்த மற்றும் சில்லறை வர்த்தகத் துறையில் 19 ஆயிரமும், மற்றய சேவைகள் வகையில் 18 ஆயிரமுமாக வேலைவாய்ப்புக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதேவேளை கல்வி சேவையில் 16 ஆயிரம் அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாகாண ரீதியாக நோக்கம் போது ஒன்ராறியோவில் 25 ஆயிரமாகவும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 15 ஆயிரமுமாக வேலைவாய்ப்பு அதிகரிப்பு காணப்படுகின்றது.

இதேவேளை நியு பவுன்லாந் மற்றும் லப்ரடோரின் எண்ணிக்கை 5,600 ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது.

Share This Post

Post Comment